பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் நீல் சந்தா(32) காலமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் அவரது மரணத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஜிம்மி கிம்மல் லைவ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக அட்லாண்டாவில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமேசான் பிரைம் ஷோக்கள் மூலமாகவும் இவர் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் . இவரின் திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.