பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் மருத்துவ படிப்பு படித்துள்ள நிலையில் சினிமா துறையின் மீதுள்ள ஆர்வத்தால் நடிப்பதற்கு வந்து விட்டார். இவர் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் விருமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மாவீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகை அதிதி மற்றொரு புதுப்படத்தில் கமிட்டாகியுள்ளார். அதன்படி அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகரும் சமீப காலமாக படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். மேலும் வில்லன் நடிகருக்கு நடிகை அதிதி ஜோடியாக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
