ராக் பாடல்களின் ராணி என்று அழைக்கப்படும் டைனா டர்னர்(83) உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட நாட்களாக புற்றுநோய், வலிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்ட அவர், சுவிட்சர்லாந்தில் அவரது வீட்டில் உயிரிழந்தார். 1950களில் தொடங்கி, 1990கள் வரை சையுலகில் ஆதிக்கம் செலுத்திய டைனா, மொத்தம் 8 கிராமி விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.