பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இந்த சீரியலில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஒரு மாதத்திற்குள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் விவாகரத்து பெற இருக்கிறார்கள் என்று இணையதளத்தில் செய்திகள் வெளி வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் தங்கள் இணையதள பக்கங்களில் இருந்து திருமண புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர்.

இருவரும் காதலித்து திருமணம் செய்த சில மாதங்களில் பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் இருவரும் மாறிமாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது விஷ்ணு புதிய ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில், விஷ்ணு உடன் பழகும்போதே சம்யுக்தா, ரவி என்ற மற்றொரு நடிகருடன் நெருக்கமாக இருந்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.