மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.

இந்த நிலையில், கொல்கத்தா போலீசார்  நடத்திய அதிரடி சோதனையின் போது, வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி சாந்தாபால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உரிய குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல் தான் கொல்கத்தாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், சோதனையில் 2 போலி ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் ரேசன் கார்டு போன்ற கடவுச்சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சாந்தாபாலைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அவரை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அவளது இந்திய பாஸ்போர்ட் தொடர்பான பின்னணியும் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.