தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் மனோ தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளில் 25,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இந்நிலையில் ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை முடித்ததற்காகவும், இந்திய இசைத் துறையில் 38 ஆண்டுகள் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியதற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.