தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் துணிவு படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏகே62 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டு மகிழ்திருமேனி இயக்குனராக கமிட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ்சிவன் விஷயத்தில் நடந்த தவறு இம்முறை நடக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனம் AK62 அப்டேட்டை பொறுமையாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மே.1 அஜித் பிறந்தநாளில் அப்டேட் வரலாம் என தெரிகிறது.