பிரபல பாலிவுட் நடிகர் சமீர் காக்கர் (71) காலமானார். நேற்று காலை மூச்சு திணறல் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை உயிரிழந்தார். கமல்ஹாசனின் புஷ்பக விமான, சல்மான்கானின் ஜெய் ஹோ, பரிந்தா, மசூம், ராஜ பாபு போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். இவரின் மறைவுக்கு திரை உலகினால் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.மும்பை போரிவலியில் உள்ள ஐசி காலனியில் சமீர் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.