பிரபல நடிகர் ராகுல் மாதவ் தமிழில் ஜெய்யுடன் “அதே நேரம் அதே இடம்” எனும் திரைப்படம் வாயிலாக நடிகராக அறிமுகமானார். இவர் யுகம் என்ற தமிழ் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். மேலும் ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வந்தார். அத்துடன் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராகுல் மாதவ்.

இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே ராகுல் மாதவுக்கு, தீபஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் ராகுல் மாதவ்-தீபஸ்ரீ திருமணம் பெங்களூருவில் நடைபெற்றது. திருமணத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஷ், நடிகர் சைஜு குரூப், நரேன் உட்பட பலர் பங்கேற்று புதுமண தம்பதியினரை வாழ்த்தினர்.