தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். இதையடுத்து மைனா திரைப்படத்தில் பிரபலமான அமலாபால் அடுத்தடுத்து குவிந்த பட வாய்ப்புகளால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். இதனிடையே டைரக்டரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார் அமலாபால். அதன்பின் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க துவங்கினார். அதே நேரம் அமலாபாலுக்கு அண்மை காலமாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.

இதன் காரணமாக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் அமலாபால். இப்போது அமலாபால் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிகினி உடையில் கடற்கரையில் நின்று கவர்ச்சியாக நடனமாடுகிறார். இதனால் பலர் அமலாபாலை கண்டித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர். அதோடு பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக இப்படி கவர்ச்சியில் இறங்கி உள்ளதாகவும் விமர்சித்து இருக்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)