தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.

இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரும் காதலுக்கு  சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று  சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.