சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை நடிகர் அர்ஜுன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நீங்கள் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வருகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அர்ஜுன், ”நான் பாஜகவில் இணையவில்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும்.

அவரை என்னுடைய கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அவரும் விரைவில் வருவதாக தெரிவித்தார். மற்றபடி நான் பாஜகவில் இணையவில்லை. இணையும் எண்ணமும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது” என்றார்.