நகைச்சுவை நடிகரும் யூடியூபருமான தேவராஜ் படேல்  நேற்று சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்தார். வீடியோ எடுப்பதற்காக பைக்கில் சென்றபோது லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராய்பூரில் இந்த விபத்து நடந்துள்ளது. தேவ்ராஜ் படேல், ‘தில் சே புரா லக்தா ஹை’ டயலாக் மூலம் பிரபலமானவர். யூடியூப்பில் அவரை 4 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்கின்றனர். அவரது மறைவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.