சின்னக்குயில் சித்ரா என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் சித்ரா தன் குரலால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார் என்றே சொல்லலாம். இவர் தமிழ் திரையுலகில் பல்வேறு ஹிட் பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார். முதன் முதலில் இவர் “சிந்து பைரவி” படத்தின் வாயிலாக பின்னணி பாடகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சித்ரா இசையமைப்பாளர் இளையராஜா, கங்கை அமரன், எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரின் இசையில் பாடிய பெருமையுடையவர் ஆவார். இந்த நிலையில் சித்ரா அளித்த பேட்டி ஒன்றில்  “சிந்து பைரவி படத்தில் இடம்பெற்றுள்ள நானொரு சிந்து பாடல் பாட இளையராஜா சார் என்னை அழைத்தார். நானும் அப்பாடலை பாடி முடித்து விட்டு அன்று மாலை ஊருக்கு கிளம்ப தயாராகி  கொண்டிருந்தேன்.

ஏனெனில் எனக்கு அடுத்தநாள் எம்ஏ முதலாம் ஆண்டு பரீட்சை இருந்தது. நான் கிளம்பி கொண்டிருக்கும் நேரத்தில் ராஜா சார் எனக்கு கால் செய்து மற்றொரு பாடலை பாடி தருமாறு கேட்டார். எனினும் என்னுடைய அப்பா பரீட்சை மிகவும் முக்கியம் என்று கூறினார்.

இதை நான் ராஜா சார் கிட்ட கூறியபோது, அவர் பரீட்சை அப்புறம் பார்க்கலாம் என கூறி விட்டார். இதனால் அவரின் பேட்ச்சை என்னால் மீர முடியவில்லை. எனவே நான் பரீட்சை எழுதாமல் பாடல் பாட சென்றுவிட்டேன். இப்படிதான் பாடகியாக நான் என்னுடைய பயணத்தை தொடங்கினேன் என்று சித்ரா தெரிவித்திருந்தார்.