மும்பையின் செம்பூர் பகுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் சோனு நிகம் பாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசேனா எம்எல்ஏ பிரகாஷும் அவரது நண்பர்களும் சோனுவுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறி மேடையில் ஏறியுள்ளனர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் சோனுவின் பாதுகாவலரை மேடையிலிருந்து தள்ளியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். மேலும் சோனுவையும் தள்ளிவிட முயன்றனர். ஆனால் அவருக்கு எந்தவித காயமும் இல்லை..