தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அசோக். இவர் தற்போது வட மஞ்சுவிரட்டு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விபத்தால் இவரை காளை மாடு முட்டி தூக்கியது. அதாவது இவர் மாட்டின் அருகே சென்ற போது திடீரென மாடு அவரை முட்டி தூக்கி வீசியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்றினர்.

அதே நேரத்தில் அவருக்கு மாட்டின் கொம்பு வயிற்றில் கீறி ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நடிகர் அசோக் கோழி கூவுது, பிடிச்சிருக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை காளை மாடு முட்டி தூக்கி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.