நடிகை அனிகா, நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படம் மூலம் கதநாயகியாகிறார்.

இந்நிலையில் நடிகை அனிகா சுரேந்தரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிகா. இந்நிலையில், அவரின் புகைப்படத்துடன், செல்வி நந்தினி 16.07.2023 அன்று அகால மரணமடைந்தார் என்று பரவிய போஸ்டரை பார்த்து குழம்பிய ரசிகர்கள், பின் அது படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தனர்.