நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருந்த சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

நடிகை சமந்தா ஓரளவுக்கு நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு தற்போது நடிப்பில் வேகம் காட்டி வருகிறார்.  இந்நிலையில் நடிகை சமந்தா விலை உயர்ந்த டூப்ளக்ஸ் பிளாட்டை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் பிரபலமான கேடட் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.7.8 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த Duplex Flat வாங்கியுள்ளதாக அறியமுடிகிறது. ஏற்கனவே ஜூப்ளி ஹில்ஸில் ரூ.100 கோடி மதிப்பிலான வீடு அண்மையில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா தற்போது சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.