நெல்சன் – விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. கதை பெரிதாக சோபிக்கவில்லை எனினும் இசையில் மிரட்டியிருந்தார் அனிரூத். படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தன. தீம் பாடலாக இருக்கும் ‘பீஸ்ட் மோட்’ வீடியோ மட்டும் வெளியாகமலயே இருந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு சன் மியூசிக்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.