பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்ததில் இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.