பெருநாட்டை சேர்ந்த பிரபல அடல்ட் திரைப்பட நட்சத்திரமான தைனா ஃபீல்ட்ஸ் (24) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் அவருடைய வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இருந்தாலும் வயது வந்தோருக்கான திரைப்படத்துறையில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர். இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருடைய மரணம் தொடர்பாக குடும்பத்தினர் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.