பிரபல நடிகை சதா, தனது தந்தை சையத் அவர்களை இழந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அவர் காலமானதாக இருந்தாலும், அதைப் பொது வெளியில் தற்போது தான் தெரிவித்து இருக்கிறார்.

இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த உணர்வோடு பகிர்ந்துள்ளார். “என் தந்தை இறந்து ஒரு வாரம் ஆகிறது… ஆனால் ஒரு சகாப்தம் கடந்துவிட்டதுபோல் உணர்கிறேன். அவர் என்னிடம்  , ‘உன் தந்தையாக இருப்பதில் பெருமை உண்டு’ என எப்போதும் சொல்வார். இன்று, அவருடைய மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அவர் உண்மையிலேயே ஒரு விலைமதிப்பற்ற நபர்… மிஸ் யூ அப்பா!” என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sadaa | Wild Stories (@sadaa_wildlifephotography)

“>

2002-ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சதா, அந்நியன், பிரியசகி, எதிரி, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். பின்னர், சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், தற்போது வனவிலங்கு புகைப்படக் கலைஞராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தந்தையின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் சதாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.