2019 ஆம் ஆண்டு தேர்தலிலேயே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என முதல்வர் ஸ்டாலின் கூறினார். வரும் தேர்தலில் பிரதமரை தீர்மானிப்பதில் திமுக முக்கிய பங்கு வகிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து பேசி உள்ள அவர், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க முதல்வர் ஸ்டாலின் தயங்கவில்லை. ராகுல் காந்திக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. INDIA கூட்டணி உருவானதில் முதல்வர் ஸ்டாலினின் முன் முயற்சி உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்