தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் இந்தப் போர் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் (NDA) இடையிலான போர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வேலூர் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய விஜய், முதல்வரின் இந்தப் பேச்சை மிகக் கடுமையாகக் கிண்டலடித்தார். “இது என்ன நாடாளுமன்றத் தேர்தலா? அல்லது நீங்கள் என்ன பிரதமர் பதவிக்கு ஏதும் போட்டி போடுகிறீர்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இது மாநிலத் தேர்தல் என்பதை மறைத்து, தேவையற்ற ஒப்பீடுகளைச் செய்து மக்களைக் குழப்ப வேண்டாம் என்று விஜய் சாடினார்.

​தொடர்ந்து பேசிய அவர், எந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் எப்படித் தகுந்த பாடத்தைப் புகட்டினார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய விஜய், முதல்வரின் இந்த ‘டெல்லி போர்’ என்கிற உருவகம் தற்போதைய அரசியல் சூழலுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்தினார்.