மோடியின் சர்ச்சை பேச்சுத் தொடர்பாக கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி இஸ்லாமியர்கள் தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, புகாரும் அளித்திருந்தன. இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர், மோடியின் பேச்சுத் தொடர்பாக பதில் கூற விரும்பவில்லை என்றார்