நாடு முழுவதும் பல வித்தியாசமான உணவு வகைகள் டிரெண்டாகி வருகின்றது. சிலவகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது. சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்டு குழந்தைகள், இளம்பெண் என பலியான நிலையில் இது குறித்து ஆய்வு செய்தபோது பல கெட்டுப்போன சிக்கன்கள் கண்டறிந்து அதிகாரிகள் அகற்றினார்கள் . பஞ்சுமிட்டாய் கலக்கும் நிறம் புற்றுநோய் ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்தும் ரசாயனம் சேர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறுவர்களிடையே பிரபலமாக உள்ள ஸ்மோக் பிஸ்கட்டும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இதை கண்டு சிறுவர்கள் பலரும் அதை சுவைக்க விரும்புகிறார்கள். சமீப காலமாக திருவிழா கடைகள், கண்காட்சிகளிலும் இந்த பிஸ்கட்டுகளை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தமிழில் திரௌபதி, உத்தரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறுவன் ஒருவன் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு மூச்சு விட முடியாமல் கதறியதோடு மயங்கவும் செய்துள்ளார். இதில் அதிகப்படியான புகை வருவதால் குழந்தைகளும் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள். இதில் ஊற்றப்படும் நைட்ரஜன் திரவம் ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கே ஆபத்து. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.