ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர், வட இந்தியாவில் உள்ள பிரச்னைகளும், தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளும் வேறு எனத் தெரிவித்தார்