11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் மறுத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது