திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாகச் சென்று திமுகவின் சாதனை மற்றும் பாஜகவின் அநீதி குறித்து பரப்புரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனவும் எச்சரித்தார்.