தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காக ஐபிஎல் (IPL 2026) போட்டிகளைத் தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த டி.பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஐபிஎல் போட்டிகளைக் காண உங்களுக்கு விருப்பமில்லை என்றால், நீங்கள் வீட்டிலேயே இருங்கள்; யாரையும் மைதானத்திற்குச் சென்று பார்க்கும்படி கட்டாயப்படுத்தவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்தது.
மேலும், இதுபோன்ற விளம்பர நோக்கிலான பொதுநல மனுக்களால் நீதிமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரம் வீணாவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர். இதனால், திட்டமிட்டபடி ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
