விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஆறு சீசங்கள் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 7 தொடர்பான விவரங்கள் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ள பிரபலங்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது. அதன்படி நடிகர் அப்பாஸ் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாகவும் இவர் இதற்காக இந்தியா வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.