விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் வீட்டில் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் . இந்நிலையில் 6 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தநிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 7 கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் போட்டியாளர் விபரங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிவருகிறது .பிக் பாஸ் சீசன் 7 முதல் போட்டியாளராக 90களில் நம்முடைய நெஞ்சங்களை வென்ற நடிகர் அப்பாஸ் கலந்து கொள்ள போவதாகவும் இவர் இதற்காக இந்தியா வந்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.