சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.