வடமேற்கு பாகிஸ்தானின் ‘சாராய் நூரங்’ (Sarai Naurang) நகரில் உள்ள ஒரு பரபரப்பான பொதுச் சந்தையில், பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், பல டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடித்ததால், அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.

​இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் சிக்கிய ஒரு சிறுமியின் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களோடு, குண்டு வெடித்த அந்தப் பயங்கர அதிர்ச்சியால் (Trauma) அச்சிறுமியால் சரியாக மூச்சு கூட விட முடியாமல், நெஞ்சு வேகமாக அடித்துக் கொள்ளும் அந்தப் பதற்றமான காட்சி, பார்ப்பவர்களின் ரத்தத்தைக் உறைய வைக்கிறது. இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.