கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒரு தம்பதி இரு பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அத்தியாநல்லூர் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கௌரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும்,‌ 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அவர் விடுமுறைகளில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் கௌரிடம் சண்டை போட்டதாக தெரிகிறது.

அந்த வகையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கௌரி தன்னுடைய தங்கை மற்றும் அப்பா ஆகியோரிடம் வீடியோ கால் மூலமாக பேசிய நிலையில் பின்னர் தன் கணவரிடமும் வீடியோ காலில் பேசினார். அவர் வீடியோ காலில் பேசிய அடுத்த நொடி கௌரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்து பன்னீர்செல்வமும் சிங்கப்பூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது இரு பெண் குழந்தைகளும் நிற்கதியாக தவிக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.