திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வடுவூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரையாண்டி (66). இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  மாவட்ட எஸ்.பி. இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்பி பரிந்துரையின் பெயரில் மாவட்ட கலெக்டர் கடற்கரையாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் நேற்று கடற்கரையாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை‌ பாளையங்கோட்டை‌ மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று சேரன்மகாதேவி தாலுகா பட்டன் காடு கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(44) என்பவரும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். எனவே ராதாகிருஷ்ணன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் எஸ்.பி. யிடம் வேண்டுகோளின் விடுத்ததின் பேரில் மாவட்ட எஸ்.பி. கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளார்.

எஸ்.பி.யின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மீது குண்டர் தடுப்பு‌ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.