விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, சமீபத்தில் திருநங்கை ஒருவர் பாலியல் துஷ்பிரயோக புகார் அளித்த விவகாரம், தற்போது சமாதானத்தில் முடிவடைந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்த திருநங்கை வைஷு, புகாரில் கூறியதாவது:  “நாஞ்சில் விஜயனுடன் கடந்த 5 ஆண்டுகளாக நெருங்கிய உறவில் இருந்தேன். அவர், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார். பின்னர், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டபின் கூட, எனது தொடர்பை தொடர்ந்தார்.

ஆனால், தற்போது ‘நீ திருநங்கை என்பதால் திருமணம் முடியாது’ என்று கூறி ஏமாற்றிவிட்டார்,” எனக் குற்றம்சாட்டினார். இந்த புகாரைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் விவகாரம் பரபரப்பாக பரவியது. பலரும் வைஷுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்; சிலர் நாஞ்சில் விஜயனுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. திருநங்கை வைஷு, தன்னை சார்ந்த புகாரை எந்தவொரு நடவடிக்கையும் வேண்டாம் என்று கூறி, எழுத்துப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். மேலும் இது தொடர்பாக, நாஞ்சில் விஜயனும் தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த வாப்பஸ் எழுத்தின் நகலை பகிர்ந்துள்ளார்.