தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரோபோ சங்கர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தனுஷ், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களின் நடித்துள்ள நிலையில் முன்னதாக மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரது உடல் எடை குறைந்த நிலையில் அது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன் என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று ரோபோ சங்கர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு என்ன பாதிப்பு என்று அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
