கவிஞர் வைரமுத்து இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பலரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து கோபமடைந்த பாடகி சின்மயி, “இங்கே பாலியல் குற்றவாளிகளை கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எதிராக பேசும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள். பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இவர்களைப் பாதுகாப்பார்கள்” என பதிவிட்டுள்ளார்.