தெலுங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சௌதகூர் பகுதியில், சிவம்பேட்டை அருகே அமைந்துள்ள மஞ்சிரா ஆற்றில் செவ்வாய்க்கிழமை ஒரு யூடியூபர் திடீரென குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அதன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

லோகேஷ் என அடையாளம் காணப்பட்டவர், ஜோகிபேட்டை இந்திராநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு முதல் யூடியூப் சேனலை நடத்திவந்த அவர், அந்த நாளில் தனது காரை பாலத்தில் நிறுத்தி, காரிலிருந்து இறங்கி, பாலத்தின் பக்கவாட்டில் ஏறி ஆற்றில் குதிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

மேலும் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக தேடியும், இது வரை லோகேஷ் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரின் இந்த  முடிவுக்கு கொண்டு வந்த காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.