நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் மாபெரும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புக்கொடி ஏற்றியதுடன், மத்திய அரசின் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா நகலை எரித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

“தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் இந்தச் சதிச் செயலைத் தமிழகம் ஒருபோதும் ஏற்காது” என ஆவேசமாகத் தெரிவித்த அவர், அண்ணாவின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

“>

 

முதலமைச்சரின் இந்த அதிரடி போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.