தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் அண்மையில் வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகிய 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் ஹனிரோஸ், வரலட்சுமி சரத்குமார், இசையமைப்பாளர் தமன், இயக்குனர் கோபிசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சக்சஸ் மீட் முடிவடைந்த பிறகு திரை பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்ட சக்சஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் பாட்டில் நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் நடிகை ஹனிரோஸ் ஆகியோர் மது குடித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடிகை ஹனி ரோஸ் தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி, முதல் கனவே, மல்லுக்கட்டு மற்றும் கந்தர்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.