பிக்பாஸ் சீசன்-6 பைனல் நேற்று நடந்து முடிந்துள்ளது. பைனலிஸ்ட்டாக விக்ரமன், அஸீம் மற்றும் ஷிவின் போன்றோர் இருந்தனர். இந்நிலையில் முதலில் ஷிவின் எலிமினேட் ஆனார். இதையடுத்து விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை கமல் அறிவித்தார். அதாவது, அஸீம் கையை தூக்கி வெற்றியாளராக அறிவித்தார் கமல்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கிய கமலின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் 106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கு ஒரு வாரத்துக்கு ரூபாய்.5 கோடி என மொத்தம் ரூபாய்.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூபாய்.20 கோடி அதிகம் என்று கூறப்படுகிறது.