தமிழில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. மேலும் நகுலுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கவர்ச்சி வேடம் ஏற்றார்.

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு ஐபோன் காணாமல் போனதாக சமீபத்தில் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில், இன்று அவரது வீட்டிற்க்கு டன்சோவில் பார்சல் வந்துள்ளது. அதில், காணாமல் போன ஐபோன் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷாலு, தனது நண்பர்களில் யாரோ ஒருவர்தான் திருடியதாக தெரிவித்துள்ளார். மேலும், “தனது 8 வருட நட்பு வீணாகிவிட்டது” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.