பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதாளர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகளை அறிந்து கொள்வோம்.

* எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அரசு விருந்தினர்களாக உபசரிக்கப்படுவார்கள்.

*வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு இலவச விமான பயணம். * இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையத்தில் விஐபி அந்தஸ்து வழங்கப்படும். * மாதம் ரூ.80,000 சம்பளம்.

* தேவை ஏற்பட்டால் ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.