இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் மாறும்போது ஒரே பி எப் கணக்கில் புதிய நிறுவனத்தின் கணக்கையும் இணைத்துக் கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு இணைக்காமல் வேறு வேறு கணக்குகளை தொடங்குவது என்பது ஆபத்து. ஒரு ஊழியருக்கு ஒரே UAN நம்பர் வழங்கப்படும். இந்த நம்பர் இன் கீழ்பல பிஎப் கணக்குகள் இருந்தால் நாம் உடனடியாக அனைத்தையும் ஒரே கணக்கில் இணைப்பது அவசியம். இதனை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு முதலில் EPFO இணையதள பக்கத்திற்கு சென்று உங்களுடைய UAN, பாஸ்வேர்டு மற்றும் கேப்சா குறியீடு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு திறக்கும் புதிய பக்கத்தில் ஆன்லைன் சர்வீஸ் என்பதை தேர்வு செய்து அதில் one member one EPF account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக தெரியும் பக்கத்தில் உங்களுடைய தகவல்கள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.

பிறகு புதிய பக்கத்தில் வேறு கணக்கில் மாற்ற விரும்பும் பிஎப் கணக்கை தேர்வு செய்ய வேண்டும்.

மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இப்போது உங்களுடைய ஆன்லைன் பணம் பரிமாற்ற செயல்முறைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட அடுத்த 15 நாட்களில் செயல்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து விடும்.