சிறுவயதில் நாம் அனைவரும் காகித அட்டையில் ‘பாம்பு-ஏணி’ (பரமபதம்) விளையாடி இருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துள்ளது.
அதில் ஒரு நபர், காகித பாம்புகளுக்குப் பதிலாக உயிருள்ள ராட்சத பாம்புகள் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய பலகையில் அமர்ந்து தாயம் உருட்டி விளையாடுகிறார். ஒவ்வொரு நகர்வின் போதும் அந்த பாம்புகள் அவர் மீது ஏறுவதும், அருகில் சீறுவதுமாக இருக்கும் காட்சிகள் பார்ப்பதற்கே அச்சத்தை உண்டாக்குகின்றன.
View this post on Instagram
“>
இந்நிலையில் இவர்கள் இந்த விபரீத விளையாட்டு குறித்த வீடியோ ‘ஜீ நியூஸ்’ தளத்தில் பகிரப்பட்டு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. “இது துணிச்சலா அல்லது முட்டாள்தனமா?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு சிறிய தவறு நடந்தால் கூட உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதால், இது போன்ற ஆபத்தான செயல்களை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலருடைய தூக்கத்தைக் கெடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
