குளிரின் பிடியிலிருந்து தப்பிக்க மக்கள் வினோதமான வழிகளைக் கையாள்வது வழக்கம், ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடும் குளிரைத் தாங்குவதற்காக பைக் ஓட்டுநர் ஒருவர் தனது உடல் முழுவதும் வைக்கோலை ஒரு போர்வை போலச் சுற்றிக்கொண்டு வாகனம் ஓட்டுகிறார்.
மேலும் பார்ப்பதற்கு ஏதோ ஒரு வினோத உருவம் பைக் ஓட்டுவது போலத் தோன்றும் இந்த வீடியோ, ‘ஜீ நியூஸ்’ வழியாக வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது நகைச்சுவையான மற்றும் எச்சரிக்கையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஒரு தரப்பினர் அவரது புத்திசாலித்தனத்தைப் பாராட்டினாலும், பெரும்பாலானோர் இது மிகவும் ஆபத்தானது என்று பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, “யாராவது ஒரு தீக்குச்சியை பற்றவைத்தால் அவ்வளவுதான்” என்றும், சிறிய நெருப்புப் பொறி பட்டாலும் வைக்கோல் வேகமாகப் பிடித்துக்கொள்ளும் என்பதால் இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
