சமூக ஊடகங்களில் தற்போது ஒரு நெஞ்சை பதறவைக்கும் வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. ஒரு ஆற்றின் கரையில் மக்கள் ஜாலியாக குளித்து, விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அங்குள்ள ஒரு மரத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான ‘கிரீன் அனகோண்டா’ பாம்பு நேரடியாக ஆற்று தண்ணீருக்குள் பொத்தென்று விழுந்தது. இந்த எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால், அங்கிருந்த மக்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு, தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இது குறிப்பாக தண்ணீரில் இருந்த ஒரு பெண், பயத்தில் உறைந்து போய் உடனடியாக ஆற்றை விட்டு வெளியேற போராடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த திகிலூட்டும் முழு காட்சியும் அங்கிருந்த கேமராவில் கைதாகி, தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனகோண்டாக்கள் பொதுவாக உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள பாம்பு வகைகளில் ஒன்றாகும்.

 

View this post on Instagram

 

A post shared by VB | Viral Bawaal Official – Memes | Comedy | News (@viralbawaal)

“>

மேலும் இவை விஷமற்றவை என்றாலும், தங்களின் அசாத்திய பலத்தாலும், தசைகளினாலும் இரையை இறுக்கிப் பிடித்துக் கொல்லும் மிக ஆபத்தான வேட்டையாடிகளாகும். பெரும்பாலும் தென் அமெரிக்காவின் சதுப்பு நிலங்கள் மற்றும் அடர்ந்த காடுகளின் ஆற்றுப் பகுதிகளில் வாழும் இந்த பாம்புகள், தண்ணீரில் மிக அமைதியாக நகரும் தன்மை கொண்டவை.

இந்நிலையில் மரத்திலிருந்து அனகோண்டா ஆற்றில் விழுந்த இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அதன் பிரம்மாண்ட தோற்றத்தைக் கண்டு வியப்பதோடு, இது உண்மையான வீடியோவா அல்லது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளனர்.