பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு, முன்னாள் தலைவர் அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் விளக்கம் அளிக்க 24 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) ராமதாஸ் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, “அன்புமணி மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கான விளக்கம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும்” என்று ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது, அன்புமணிக்கு இப்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு, மாத இறுதிக்குள் தனது பதிலை அதிகாரப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்பதாக ராமதாஸ் தரப்பின் உத்தரவு கூறப்பட்டுள்ளது.
